பிறந்தவர் அனைவரும் பந்தம் -இந்த பிரபஞ்சம் அனைவர்க்கும் சொந்தம்

வியாழன், 13 அக்டோபர், 2011


உறவுகள் இல்லாத மனிதனை.....

அனாதை என்பர் உலகத்தார்.....

உறவுகள் இல்லாத மனிதன்

மட்டும் ‌அனாதை ‌அல்ல.....

உறவுகள் இல்லாத குடும்பமும்

அனாதை குடும்பம் தான்.....

எனது குடும்பமும் ஓர்

அனாதை குடும்பம் தான்.....

உறவுகளை நம்பாதே அது.....

     உன்னை ஏமாற்றி விடும்.....

அனைத்து உறவுகளும் இருந்தும்.....

இல்லாதது போல் நடிக்கின்றன.....

நான் உறவு கொண்டாட.....

வாய்விட்டு மாமா என்றழைக்க.....

சித்தப்பாவிடம் ‌அறிவுரை கேட்க.....

பெரியப்பாவிடம் என் குறைகளைச் சொல்ல.....

அத்தை மகளிடம் மனம் விட்டுப் பேச.....

வெட்கம் விட்டு கேட்கிறேன்.....

எனக்கு ஓர் உறவு வேண்டும்.....

குடும்பத்துடன் உறவு ‌கொள்ள வாரீகளா......?


                                 - இரா. கணேஷ் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் எங்களை ஆவதாக பார்த்த வருகைக்கு நன்றி