பிறந்தவர் அனைவரும் பந்தம் -இந்த பிரபஞ்சம் அனைவர்க்கும் சொந்தம்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஏ! சபிக்கப்பட்ட பெண்ணினமே!

 • கண் விழித்த நேரம்முதல்
  களவி முடிந்து
  கண்ணயரும் வேளைவரை
  பிறர்க்காகவே பெரும்பொழுதைக் கழிக்கும்
  பெண்ணினமே

 • உறங்கி விழித்து
  உள்ளைங்கை பார்த்து
  காலைக்கடனை கூட முடிக்காமல்
  கணவனுக்கும்
  குழந்தைக்கும்
  பணிவிடை செய்து செய்தே
  பாழாய் போன பெண்ணே!

 • உண்ணைப்பற்றி என்றேனும் நீயோ?
  உனக்காக பிறரும்
  கவலைப்பட்டதுண்டா?
  காய்ச்சலில் கிடந்தாலும்
  காய்ச்சவில்லையா என்று
  ஏள்னக்கேள்வி கேட்கும்
  எண்ணிலடங்கா ஆண்வர்க்கம்  

 • பூவுக்கு ஒப்பிட்டவளை

குடும்ப பாரமென்ற‌
பொதிசிமக்க வைக்கிறீரே!
*************************************க.ஆ.பாலசுப்பிரமணியம்
************************கணினி அறிவியல் துறைத் தலைவர்
*********அருள்மிகு கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி
***************************ஆனந்த் நகர் ,கிருஷ்ணன் கோவில்.

2 கருத்துகள்:

நீங்கள் எங்களை ஆவதாக பார்த்த வருகைக்கு நன்றி