பிறந்தவர் அனைவரும் பந்தம் -இந்த பிரபஞ்சம் அனைவர்க்கும் சொந்தம்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

இறந்துபோன இதயக்குரல்

குழந்தையும் தெய்வமும்


ஒன்று என்று சொல்லும்

சமுதாயம் அனாதையாக‍_என்னை

குப்பை தொட்டியில் வீசியது!என் பிஞ்சுவயிற்றை

நிரப்புங்கள் _என்று

பிச்சை கேடும் நிலை!பறந்து சென்று

பள்ளி செல்ல நினைக்கும்

ஏக்கங்கள் என்மனதில்

கேள்விக்குறியாக!கட்டிடத்தில் கற்களை

சுமந்தபோது_அருகில் இருந்த‌

பள்ளி கட்டிடங்களும்

கேலிசெய்யும் நிலை!உங்கள் வாழ்கை

தொடங்கும் நேரத்தில்

எனது வாழ்க்கை முடிந்து

க‌ல்ல‌றையில் உற‌ங்குகிறேன்!

******************வேனுகாந்த‌ன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் எங்களை ஆவதாக பார்த்த வருகைக்கு நன்றி