பிறந்தவர் அனைவரும் பந்தம் -இந்த பிரபஞ்சம் அனைவர்க்கும் சொந்தம்

புதன், 9 பிப்ரவரி, 2011

இயற்கையின் இன்றைய நிலை

தாகமாய் இருந்தபொது

தாய்ப்பால் கொடுத்தவள்

தாயான இயற்கைஇசையின் தாய், தந்தையான‌

இனிய பறவைகள் பலவும்‍‍ இன்று

இறைதேடுகிறதோ?

இருள்நிறைந்த பாதாளத்தில்!

ம‌டின்த்துவிட்டோம் என்று

ம‌ண்ணிற்குள் புதைன்துபோன‌ விதைக்கும்

ம‌றுவாழ்வு அளித்த அமுத‌ம‌ழையும்_ இன்று

அமில‌ம‌ழையாக‌ அழுகிற‌தோ?ம‌ண் அரிப்பால்

ம்யான‌மாகிற‌து_ இன்று

ம‌லைப்ப‌குதிக‌ளும்ம‌ண்ணிற்குள்ளும் காற்றை வைத்த‌

ம‌ண்புழுக்க‌ளும் ம‌ர‌ண‌வாச‌லில்

ம‌டின்து கொண்டிருக்கிற‌தோ

ம‌னித பூச்சிக‌ளால்!த‌ன்னைத் தாண்டி

த‌ண்ணீரையும் விடுவ‌தில்லை_ இன்று
தடையாக பாலித்தீன்கள்!
காற்று மண்டலத்திலும்_ இன்று

கணக்கற்ற ஓட்டைகள்!

கதிரவனின் ஒளிக்கதிர்களல்

காயங்கள் பல‌

கருவில் உள்ள குழந்தைக்கும்!இயற்கை வளர்த்த‌

இமயமலையில் பனிக்கட்டிகளும்

இறங்கிகொண்டிருக்கிறதோ?

இன்னொரு உலகம் பார்க்க!இயர்கை இன்னும் மனித மரணத்தில்

இணைந்துகொண்டிதான் இருக்கிறது!

இருந்தாலும்

இயற்கை மட்டும் இல்லறம் புரியும்

இன்னொரு உலகம் வரப்போகிறதாம்!

ம‌னித‌னை வ‌ள‌ர்த்த‌ இய‌ற்க்கையும்

ம‌ர‌ண‌மாகிற‌து_இன்றைய‌

மாசுச் சூழ‌லில்!சொந்த‌ ப‌டைப்பும்

சோக‌த்தை த‌ருகிற‌த‌?

சொந்த‌மான‌ ந‌ம் இய‌ற்கையும்_இதை

சொல்லிக்கொண்டுதான் இருக்கிற‌து!


************************வேனுகாந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் எங்களை ஆவதாக பார்த்த வருகைக்கு நன்றி